நீதிமன்றத்திற்கு தவறான தகவல் அளித்த கோவை டாஸ்மாக் மேலாளருக்கு அபராதம்
கோவை: பணியாளர் நீக்கம் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த கோவை டாஸ்மாக் மேலாளருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்தது.
கோவையை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தவர். இவர் மதுவில் கலப்படம் செய்ததாக குற்றம் சாட்டி பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்க உத்தரவின்றி தன்னை பணி நீக்கம் செய்தது தவறு என்றும், மேலும் தன்னை பணியில் சேர்க்க உத்தரவிட கோரி, விஸ்வநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி தனது உத்தரவில், மனுதாரருக்கு பணி நீக்க உத்தரவு வழங்காமல், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பணி நீக்க உத்தரவு வழங்கியதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தவறான தகவலை தெரிவித்துள்ளார். எனவே அவருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதை அவர் மனுதாரரின் சட்ட செலவுக்கு வழங்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
-
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications