ஐயப்பன் விக்கிரத்தை தொட்ட வழக்கு: ஜெயமாலாவை விசாரிக்க தடை
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் விக்கிரத்தை தொட்டது தொடர்பாக நடிகை ஜெயமாலா உள்பட 3 பேருக்கு எதிராக நடக்கும் வழக்கை விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சபரிமலையில் 2004ம் ஆண்டு பிரபல ஜோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தலைமையில் தேவபிரச்சனம் நடந்தது. அப்போது ஐயப்ப விக்கிரத்தை இளம்பெண் ஒருவர் தொட்டதால் புனிதம் கெட்டு விட்டதாக கூறினார். அதற்கு மறுநாளே புனித விக்கிரத்தை நான் தான் தொட்டேன் என கன்னட நடிகை ஜெயமாலா தெரிவித்தார்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் உன்னிகிருஷ்ண பணிக்கரும், ஜெயமாலாவும் சேர்ந்து நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து கடந்தாண்டு டிசம்பரில் ஜெயமாலா, உன்னிகிருஷ்ண பணிக்கர் மற்றும் அவருடைய உதவியாளர் ரகுபதி ஆகியோர் மீது மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு ரான்னி முன்சீப் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குக்கு தடை விதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஜெயமாலா மனு தாக்கல் செய்தார். அதில் சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்லக்கூடாது என 1991ல் தடை விதிக்கப்பட்டது.
நான் அதற்கு முன்பே சபரிமலை சென்றேன். எனவே என் மீது வழக்கு பதிய முடியாது. இது தொடர்பாக 2006ம் ஆண்டு சபரி்மலை கோயில் நிர்வாகிக்கு பேக்ஸ் மூலம் தகவல் தெரிவித்தேன். ஆனால் 2010ம் ஆண்டுதான் என் மீது வழக்கு பதியப்பட்டது.
எனவே என் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நேற்று விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன், ஜெயமாலா உள்பட 3 பேருக்கு எதிரான வழக்கை விசாரிக்க ரான்னி நீதிமன்றத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications