குரங்கு பயத்தில் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி பலி
காரைக்கால்: காரைக்காலில் கல்லூரியில் சுற்றி திரிந்த குரங்குகளுக்கு பயந்து ஓடிய மாணவி, 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
காரைக்காலை அடுத்த நிரவிகீழராஜ வீதியை சேர்ந்த நைனா மரைக்காயர் மகள் மெகபூப்நிஷா(19). அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. இந்த கல்லூரியில் அவ்வப்போது குரங்குகள் உலா வந்து, மாணவிகளை பயப்படுத்தி வருவது சகஜம்.
இந்நிலையில் நேற்று கல்லூரியின் பழைய கட்டத்தில் உள்ள 2வது மாடியில் உள்ள வகுப்பறையில் மெகபூப்நிஷா இருந்துள்ளார். அப்போது அங்கு சில குரங்குகள் வந்துள்ளன. இதில் மிரண்ட மெகபூப்நிஷா ஓடிய போது, மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
அவர் குரங்குகளை பார்த்த ஓடியதால் பயத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. படுகாயமடைந்த மாணவியை மீட்டு மற்ற மாணவிகள், காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், மெகபூப்நிஷா உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications