பாபுவா நியூ கியூனியாவில் விமான விபத்து: 28 பேர் பலி
மடங்கு: பாப்புவா நியூ கியூனியாவில் புயலில் சிக்கிய விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில், 28 பேர் பலியாகினர். 4 பேர் காயத்துடன் உயிர்தப்பினர்.
ஆஸ்திரேலியா நாட்டிற்கு மிக அருகில் உள்ள மிக சிறிய குடியரசு நாடு பாப்புவா நியூ கியூனியா. பி.என்.ஜி டாஸ் 8 என்ற ஒரு பயணிகள் விமானம் லாயி என்ற பகுதியில் இருந்து மடங்கு என்ற இடத்திற்கு பறந்தது. இதில் விமான ஓட்டுநர்கள் 2 உட்பட 32 பேர் பயணித்தனர்.
மடங்கு பகுதியில் இருந்த 20 கி.மீ தொலைவில் உள்ள காட்டு பகுதி வழியாக வானில் பறந்து போது, கடும் சூறாவளி மற்றும் மழை பெய்தது. இதையடுத்து விமானம் மிக குறைவான உயரத்தில் பறந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்திற்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு மற்றும் மருத்துவ குழுவினர் 28 பேரின் இறந்த உடல்களை மீட்டனர். மேலும் விபத்தில் பயணித்த 2 விமானிகள், 1 ஆஸ்திரேலியர், 1 நியூஸ்லாந்தியர் என 4 பேர் உயிருடன் மீ்ட்கப்பட்டனர்.
கடும் புயல் காரணமாக சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும், விபத்து நடந்த காட்டு பகுதி கடற்கரை பகுதியை ஒட்டி காணப்பட்டதால் நீர்வழியாக மீட்பு பணிகள் நடந்தது.
இதுகுறித்து விபத்தில் உயிரோடு மீட்கப்பட்டவர் கூறியதாவது, விமானம் கடும் மழை மற்றும் புயலில் சிக்கி தவித்தது. மிக குறைந்த உயரத்தில் பறந்த போதும், புயலில் சிக்கிய விமானம் 2 துண்டாக உடைந்து கீழே விழுந்தது. அப்போது உயிர் தப்பும் பொருட்டு விமானத்தில் இருந்து குதிக்க முயன்ற போது, எனது கைகளும், முதுகிலும் கடும் தீக்காயம் ஏற்பட்டது, என்றார்.
விமானத்தில் பயணித்த பெரும்பாலான பயணிகள், தங்கள் பிள்ளைகளின் கல்லூரி பட்ட சான்றிதழை பெற பயணித்தவர்கள் என தெரிகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications