லோக்பால் குழுவில் பிரசாந்த் பூஷண் இருப்பதா வேண்டாமா என்பது பின்னர் முடிவு செய்யப்படும்! - ஹஸாரே
டெல்லி: காஷ்மீர் பற்றி முரண்பாடான கருத்து தெரிவித்துள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், லோக்பால் குழுவில் இருப்பதா வேண்டாமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அன்னா ஹஸாரே கூறியுள்ளார்.
காஷ்மீர் பிரிந்து செல்வதானால் செல்லட்டும் என்று பிரசாந்த் பூஷண் சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக ஸ்ரீராம் சேனா அமைப்பினர் அவரை அடித்து உதைத்தது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து ஹஸாரேவிடம் கேட்டபோது அது அவர் டசொந்தக் கருத்து என்று மட்டும் கூறிவிட்டார்.
ஆனாலும் விடாத ஒரு நிருபர், "முரண்பட்ட கருத்தை வெளியிட்ட பிரசாந்த் பூஷணை, லோக்பால் மசோதா வரைவு குழுவில் இருந்து நீக்குவீர்களா?'' என்று கேட்டார்.
அதற்கு, "காஷ்மீர் விவகாரம் குறித்து பிரசாந்த் பூஷண் தெரிவித்த கருத்து நல்ல கருத்து அல்ல, சரியான கருத்தும் அல்ல. அவரை லோக்பால் மசோதா வரைவு குழுவில் வைத்து இருப்பதா? வேண்டாமா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்'' என்று அன்னா ஹசாரே கூறினார்.












Click it and Unblock the Notifications