திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவிக்கும் குஜராத் கிராம ஆண்கள்

தென்னிந்தியாவில் ஆண் பெண் விகிதாச்சாரம் அதிகரித்து சமநிலையை எட்டியுள்ள நிலையில், வட இந்தியாவின் பல மாநிலங்களில் இது தலை கீழாக உள்ளது. கடந்த 2001ம் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என இருந்தது.
ஆனால், 2011ம் ஆண்டு எடுக்க கணக்கெடுப்பின்படி அதுமேலும் குறைந்து 1,000 ஆண்களுக்கு 914 பெண்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. இந்தியாவில் கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் சியானி என்ற கிராமத்தில் திருமணம் செய்ய பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விவசாய கிராமமான இந்த பகுதியில் திருமணம் செய்து கொள்ள பல ஆண்டுகளாக பெண் பார்த்தும், கிடைக்காமல் தவிக்கும் ஆண்கள் அதிகம்.
இதில் 24க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண் துணை இல்லாமல் ஒரே இடத்தில் வசித்து வருகின்றனர். சியானி கிராமத்தில் இதேபோல திருமணம் செய்யாமல், பெண் கிடைக்க காத்திருந்து 35 வயதை கடந்தவர்கள 350க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். பெண் கிடைக்காமல் துக்கப்பட்டு திரிந்த வாலிபர்கள் தற்போது ஒரு கூட்டணி அமைத்து ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு சமையல், வீட்டை சுத்தம் செய்வது, துவைப்பது என பெண்களின் அனைத்து பணிகளையும் ஆண்களே செய்து கொள்கின்றனர். இந்த பிரம்மசாரிகள் காலையில் வேலைக்கு சென்று, மாலையில் தங்கள் இடத்தில் கூடி சேர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒரு டீக்கடை இதற்கு பெரும் உதவியாக உள்ளது.
படிப்பறிவு மற்றும் பொருளாதார குறைவு காரணமாக, இருக்கின்ற சில பெண்களும் இந்த கிராம வாலிபர்களை மணக்க மறுக்கின்றனராம். ஒரு சில சிறிய தொழிற்சாலைகளை மட்டுமே கொண்ட இந்த கிராமத்தில் அதிக வசதியும் இல்லை. இதனால் வாலிபர்களுக்கு யாரும் பெண் கொடுப்பதில்லை.
இந்த கிராமத்தில் திருமணம் செய்ய விரும்பும் பெண்கள், ஆண்களின் சம்பாதிப்பு திறன், கிராமத்தில் அவரது மதிப்பு, சொத்து, உடல் திறன் என பல காரியங்களை பார்த்து திருப்தியடைந்தால் மட்டுமே திருமணத்திற்கு ஒத்து கொள்கின்றனர். இதனால் பலருக்கு பெண் கிடைப்பதில்லை.
இதுகுறித்து பெண் கிடைக்காமல் தவிக்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது, எனக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பெண் பார்த்து வருகின்றனர். தற்போது எனக்கு 45 வயதாகிவிட்டது. ஆனால் இதுவரை ஒரு பெண் கூட திருமணம் செய்து கொள்ள கிடைக்கவில்லை, என்றார்.
இன்னொருவர் கூறுகையில், இந்த கிராமத்தில் வேலை இல்லை என வெளியூர் சென்ற போது, அங்கே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொண்டேன். இங்கேயே இருந்திருந்தால், எனக்கும் திருமணமாகி இருக்காது, என்றார்.
இந்த கிராமத்தின் நிலையை பார்க்கும் போது, வருங்காலத்தில் பெண் வீட்டாருக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா என்ற சந்தேகம் உருவாகி உள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications