பெண் வேட்பாளர்களின் கையோங்கி நிற்கும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்
நெல்லை : நெல்லை, தூத்துக்குடியில் 9 நகராட்சிகளில் 7 நகராட்சிகளில் தலைவர் பதவிக்கு பெண்கள் போட்டியிடுகின்றனர். 2 நகராட்சிகளில் மட்டுமே ஆண் வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகள் உள்ளன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாநகராட்சிகள் உள்ளன. இந்த 2 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின், நகராட்சிகளிலும் பெண்கள் கையே ஓங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 7 நகராட்சிகள் உள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, காயல்பட்டிணம் ஆகிய 2 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளின் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்காசி, கடையநல்லூர், அம்பாசமுத்திரம், விக்கிரமாசிங்கபுரம், கோவில்பட்டி, காயல்பட்டிணம் ஆகிய 6 நகராட்சி தலைவர் பதவிகள் பொதுப் பிரிவில் பெண்களுக்கும், சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவி தனி பிரிவில் பெண்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
புளியங்குடி, செங்கோட்டை நகராட்சியில் மட்டுமே ஆண் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். மாநகராட்சி, நகராட்சிகளில் பெண் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளதால் எங்கும் பெண்கள் மயமாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications