இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்: கடலூரில் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலூர் தேவனாம்பட்டினம் சுனாமி நகரை சேர்ந்தவர் ஞானசேகரன்(35), கடலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் மீது கடலூர் தேவனாம்பட்டினம் மாரியப்பன் கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் கடலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அமுதவல்லிக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.

அதையேற்று கலெக்டர் அமுதவல்லி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+