தேர்தல் குளறுபடிகள்: அதிமுக ஒன்றும் யோக்கியம் இல்லை- விஜயகாந்த் தாக்கு
Subscribe to Oneindia Tamil

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியதாக பல இடங்களில் புகார் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையமும் அறிவித்தபடி வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தவில்லை. போதிய போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்று பல கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்தும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து புகார் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் கடந்த ஆட்சியில் எப்படி புகார் எழுந்ததோ தற்போதும் அதே போல் தான் புகார்கள் குவிகின்றன. பூத் சிலிப்கள் வழங்கப்பட்டதிலும் பெரும் குளறுபடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications