திமுக வேட்பாளரை கைது செய்ய அதிமுகவினர் நெருக்கடி
வேலூர்: வாணியம்பாடி நகர்மன்ற திமுக வேட்பாளராக சிவாஜியை கைது செய்ய அதிமுகவினர் நெருக்கடி அளிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் திமுக வேட்பாளராக சிவாஜி போட்டியிடுகிறார். தற்போதைய நகராட்சி தலைவராக உள்ள இவர் மீது திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக அப்துல் ரகுமான் என்பவர் புகார் அளித்துள்ளனர்.இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரிக்கப்பட்டு, சிவாஜி குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இதற்கு அதிமுக வேட்பாளர் நிலோபர் கபில் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த குற்றசாட்டை கையில் எடுத்து கொண்ட தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் பிரச்சாரத்தில் சிவாஜியை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திமுக வேட்பாளரை விரைவில் கைது செய்ய வேண்டும் என அதிமுக தரப்பில் போலீசாருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
அவரது மீதான குற்றசாட்டுகளை மறுத்துள்ள சிவாஜி, தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். சிவாஜிக்கு இந்த தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் அவர் மீது வழக்குகளில், சிவாஜி விரைவில் கைது செய்யப்படவும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications