தீபாவளி இனாம் வாங்கிய அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜ் கைது
கரூர்: கரூர் அருகே கல்குவாரி அதிபரிடம் தீபாவளி இனாம் வாங்கிய தாசில்தார் கோவிந்தராஜ் என்பவரை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கனிம வளத்துறையின் அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை சந்தித்த அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜன்(54) தீபாவளி இனாமாக 10,000 ரூபாய் வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஆனால் தான் முறையாக அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருவதால் பணம் தர முடியாது என வீரன் பதில் கூறியுள்ளார். விடாப்படியாக தாசில்தார் கோவிந்தராஜ் லஞ்சம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார்.
இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் வீரன் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி ரசாயனப் பொடி தடவிய 10,000 ரூபாய் பணத்தை, அரவக்குறிச்சி தாசில்தார் கோவிந்தராஜனிடம் வீரன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் கோவிந்தராஜை கைது செய்தனர்.
கரூர் தாந்தோணிமலை மில்கேட் பகுதியில் உள்ள கோவந்தராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 4,30,000 ரூபாய் ரொக்கம், வங்கி பாஸ் புத்தகம், ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications