வாக்குச் சாவடியில் தங்காமல் வேட்பாளர் சுப்புலட்சுமி வீட்டில் தங்கிய தேர்தல் அலுவலர்கள் சஸ்பெண்ட்
தேனி: தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிக்குப் போகாமல், அங்கு வாக்குப் பெட்டிகளையும், வாக்குச் சீட்டுக்களையும் மட்டும் வைத்து விட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சுப்புலட்சுமி என்ற வேட்பாளரின் வீட்டில் போய்த் தங்கிய இரு தேர்தல் அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம ஆண்டிப்பட்டி தாலுகா அனுப்பம்பட்டி கிராமத்தி்ல் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. முன்னதாக, தலைமை தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட உத்தமபாளையம் தனியார் கல்லூரி பேராசிரியர் சரவணன் , தேர்தல் அதிகாரியான ராயப்பன்பட்டி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சவேரியார் ஆகியோர் வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்களை பெற்றுக் கொண்டு அதை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்திற்குக் கொண்டு வந்தனர்.
பின்னர் வாக்குச் சாவடியில் அவற்றை வைத்த அவர்கள், நேராக சுப்புலட்சுமி என்பவர் வீட்டுக்குப் போய் விட்டனர். இந்த சுப்புலட்சுமி, ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் ஆவார்.
தகவல் அறிந்ததும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். வாக்குச் சீட்டுக்களையும், வாக்குப் பெட்டிகளையும் பொறுப்பே இல்லாமல் வைத்து விட்டு வேட்பாளர் வீட்டில் தங்குவதா என்று கூறி தேர்தல் அதிகாரிகளுடன் அவர்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீங்கள் தேர்தல் நடத்த வேண்டாம் என்று கூறி அவர்களை கிராமத்தை விட்டு வெளியேற்றினர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிச்சாமிக்குத் தகவல் போனது. இதையடுத்து இரு தேர்தல் அதிகாரிகளையும் அவர் சஸ்பெண்ட் செய்ய கல்வித்துறைக்கு உத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications