பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் மகனை கடத்த தீவிரவாதிகள் திட்டம்: ரஹ்மான் மாலிக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் மகன் பிலாவலை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம். இந்நிலையில் இந்த 2 இயக்கங்களும் சேர்ந்து, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரி(23)யை திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியதாவது, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரியை கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது இங்கிலாந்தில் தங்கியுள்ள பிலாவல் பூட்டோ சர்தாரி, அவ்வப்போது பாகிஸ்தான் வந்து செல்கிறார்.
இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவராக உள்ள நிலையில் இவர் பாகிஸ்தானுக்கு அடுத்த தலைவராக பொறுப்பு ஏற்க வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டே தாரீக்-இ- தலிபான் மற்றும் அல்-கொய்தா இயக்கங்கள் சேர்ந்து அவரை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒரு ரகசிய நிறுவனம் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. பிலாவல் மட்டுமின்றி பாகிஸ்தானில் உள்ள மற்ற சில அரசியல் பிரபலங்களையும் கடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டத்தை தகர்க்கும் பொருட்டு அரசியல் பிரபலங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications