மோடி ஆட்கள் எனது தாயார் வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை எரித்துவிட்டனர்: சஞ்ஜீவ் பட்
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் நேற்று ஜாமீனில் விடுதலை ஆனார். தான் சிறையில் இருந்தபோது மோடியின் ஆதரவாளர்கள் தனது தாயாரின் வீடு புகுந்து பல முக்கிய ஆதாரங்களை தீ வைத்து எரித்துவிட்டதாக பட் குற்றம்சாட்டியுள்ளார்.
கோத்ரா வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது குற்றம்சாட்டினார் அப்போது உளவுப் பிரிவில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்.
அந்த ஆண்டு கலவரம் உச்சத்தில் இருந்த பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் பட் தெரிவி்த்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 30ம் தேதி பட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பட் குஜராத் கலவரத்தில் முதல்வர் மோடிக்கு தொடர்பு இருப்பது போன்று போலி ஆவணங்கள் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அகமதாபாத் செஷன்ஸ் நீதிமன்றம் பட்டுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த பட் கூறியதாவது,
சட்டம் இன்னும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. நான் சிறையில் இருந்த நேரத்தில் மோடியின் ஆட்கள் எனது தாயார் வீட்டில் அத்துமீறி நுழைந்து நான் அங்கு வைத்திருந்த முக்கியமான ஆவணங்களை எரித்துவிட்டனர். அவை குஜராத் கலவரம் தொடர்பாக மோடிக்கு எதிரான ஆதாரங்கள் ஆகும்.
நான் மோடிக்கும், அவரது அரசிற்கும் அச்சுறுத்தலாக உள்ளேன். நான் பணியில் இருந்தபோது எப்போதுமே மோடியை ஒரு குற்றவாளியாக மட்டுமே தன்னால் பார்க்க முடிந்தது. காரணம் அவர் அப்படித்தான் நடந்து கொண்டார் என்றார் பட்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications