தேர்தல் தகராறு: மேலூர் அருகே அதிமுக வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு
மேலூர்: மேலூர் அருகே தேர்தல் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் அதிமுக வேட்பாளருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மேலூர் அருகே உள்ளது திருவாதவூர். இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ராஜேந்திரன் என்பவருடைய மகன் முருகன் மனைவி சுதா போட்டியிடுகிறார்.
அதே பதவிக்கு மோகன் என்பவரது மனைவி சசிகலா சுயேட்சையாக களத்தில் உள்ளார்.
இவர்களுக்குள் தேர்தல் முன் விரோதம் காரணமாக திடீர் தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் டி.எஸ்.பி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தகராறில் ஈடுபட்ட கும்பலை விரட்டியடித்தனர். அப்போது கலவர கும்பல் நாலாபுறமும் சிதறி ஓடியது.
மேலும் இந்த சம்பவத்திற்கு 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நல்லதம்பி மகன் முருகன் தான் காரணம் எனக் கருதி அந்த வழியே வந்த அவரை ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில படுகாயமடைந்த முருகன் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications