நாமக்கலில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவடத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் கணேசன் என்பவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார்.

தமிழகம் முழுக்க இன்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் அமைதியாக நடக்க மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் வடக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்களித்து வந்தனர்.

இந்த நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் கணேசன் (63) என்பவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர் திடீர் என்று மயங்கி விழுந்து மரணமடைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+