தலாய் லாமா நாடு திரும்பக் கோரி் சீனாவில் பெண் புத்த பிக்கு தீக்குளித்து சாவு
பீஜிங்: சீனாவில் பெண் புத்த பிக்கு ஒருவர் திபெத்திய மத தலைவர் தலாய் லாமா நாடு திரும்பக் கோரியும், திபெத்தில் மதச்சுதந்திரம் வேண்டும் என்று கூறியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திபெத்திய மத தலைவர் தலாய் லாமா உலகம் முழுவதும் பயணம் செய்து போதனை செய்கிறார். ஆனால் அவரை சீனா அடியோடு வெறுக்கிறது. அவரை துறுவு வேடத்தில் இருக்கும் நரி என்று சீனா கூறியுள்ளது. பதிலுக்கு தலாய் லாமா சீன தலைவர்களை மூளை வளர்ச்சியில்லாதவர்கள் என்று சாடியுள்ளார். இவ்வாறாக தலாய் லாமாவுக்கும், சீன தலைவர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தலாய் லாமா நாடு திரும்பக்கோரியும், திபெத்தில் மதச்சுதந்திரம் வேண்டும் என்று கூறியும் சீனாவில் ஒரு பெண் புத்த பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சீனாவில் சிச்சுவான் மாநிலம் அபா பகுதியில் ஒரு புத்தமத பெண் துறவியர்களுக்கான பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பள்ளிக்கூடத்திற்கு வெளியே டென்சின் வாங்க்மோ (20) என்ற பிக்கு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டில் மட்டும் டென்சினையும் சேர்த்து மொத்தம் 9 பேர் தலாய் லாமாவுக்காக தீக்குளித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அபா பகுதியில் திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திபெத்திய புத்தமத சாமியாரான புங்ட்சோக்(21) தீக்குளித்து தற்கொலை செய்தார். இதையடுத்து 300 புத்தமத சாமியார்களை ராணுவம் கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications