For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் கருணாநிதி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று மதியம் 1 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்.

இன்று ஒரு பக்கம் திருச்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.

இத்தனை ஆண்டுகளாக ஆஜராகாமல் சாக்கு, போக்கு சொல்லி வந்த முதல்வர் இன்று ஆஜராவதால் அவரிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று மதியம் 1 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். திருச்சி இடைத்தேர்தல் முடிவு மற்றும் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து கருணாநிதி பேசுவார் என்று எதிரிபார்க்கப்படுகிறது.

English summary
DMK leader Karunanidhi is meeting the press today in Chennai Anna Arivalayam at 1 pm. Trichy by-election counting is going on and CM Jayalalithaa is appearing before the Bangalore special court in asset case. It is expected that Karunanidhi may talk about by-election result and Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X