27ம் தேதிக்குள் ரூ 9.5 லட்சம் கட்டவும்!- கேஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

இந்திய வருவாய்த் துறை பணியாளரான இவர் கடந்த 2000 ஆண்டு படிப்புக்காக பணியிலிருந்து விடுப்பில் சென்றார். சம்பளமில்லாத விடுப்பு தருமாறு அப்போது கேட்ட அவர், இந்த விடுமுறையை பின்னர் பணியாற்றி கழித்துவிடுவதாக மேலதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
பின்னர் மீண்டும் 2002-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். 2004-ம் ஆண்டு முதல் சம்பளம் வாங்காமல் பணியாற்றி தனது முந்தைய விடுப்பைக் கழித்துவிடுவதாகக் கூறினார். அப்போதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்ட பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். இது அரசுப் பணியல்ல. அவரவர் விருப்பப் பணி. வேலைக்கு வராமல் இந்தப் பணியில் மூழ்கிவிட்டார் அவர் என்கிறது வருமான வரித்துறை.
இந்த நிலையில் கேஜ்ரிவால் 2006-ம் ஆண்டு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவதாகக் கூறி மனு கொடுத்தார். ஆனால் இதனை வருமான வரித்துறை ஏற்கவில்லை.
காரணம், இவர் படிக்கச் சென்ற காலத்தில், விடுப்புக்காக கூறிய காரணம் சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்றும், இவர் அதன் பிறகு பணிக்கே வராமல் ஒப்பந்தத்தை மீறி விட்டார் என்றும் வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் இவர் தனது ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்று இருமுறை வருமான வரித்துறைக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அவர்களோ, முதலில் சம்பளத்தை திருப்பிக் கொடுங்கள். பிறகுதான் ராஜினாமாவை ஏற்க முடியும் என்று கூறிவிட்டனர்.
ஆனால் சம்பளத்தைத் திருப்பிக் கொடுக்காத அரவிந்த், ராஜினாமாவை ஏற்காதது வருமான வரித்துறையின் தவறு. நான் என்ன செய்யட்டும்? என்று கூறி, டீம் அன்னாவுக்கு எதிரான அரசின் சதி இது என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 2 ம் தேதி, பணிக்கு வராமல் வாங்கிய சம்பளத் தொகை ரூ 9.5 லட்சத்தை திருப்பித் தர வேண்டும் என அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆனால் பணத்தைக் கட்டமாட்டேன் என ஆவேசமாக பேட்டிகள் அளித்து வந்தார் கேஜ்ரிவால்.
இந்த நிலையில் அக்டோபர் 27-ம் தேதிக்குள் கேஜ்ரிவால் இந்தத் தொகையை செலுத்தியாக வேண்டும் என இரண்டாவது நோட்டீஸ் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications