பசிபிக் கடலில் 7.3 ரிக்டர் பயங்கர நிலநடுக்கம்- நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை வாபஸ்
Subscribe to Oneindia Tamil
வெலிங்டன்: நியூசிலாந்துக்கு வடக்கே உள்ள கெர்மடேக் தீவுகளை ஒட்டி பசிபிக் கடலில் இன்று மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.3 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
அந் நாட்டு நேரப்படி இன்று காலை 6.57 மணிக்கு கடலுக்கடியில் 16 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நியூசிலாந்து நாட்டுக்குச் சொந்தமான இந்தத் தீவுகளில் மக்கள் யாரும் வசிக்கவில்லை. இந்தத் தீவு அடிக்கடி நிலநடுக்கத்துக்கு உள்ளாகி வரும் பகுதியாகும்.
இன்றைய நிலநடுக்கத்தையடுத்து நியூசிலாந்தை சுனாமி அலைகள் தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications