தேர்தலே சூதாட்டமா போச்சு - ராமதாஸின் விரக்தி

Subscribe to Oneindia Tamil

Ramadoss
சென்னை: தமிழகத்தில் தேர்தல் என்பதே சூதாட்டமாகப் போய்விட்டது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியைத் தழுவிய கட்சிகளுள் ஒன்றாகிவிட்டது பாமக.

இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து களமிறங்கியது. திராவிட கட்சிகள் பணத்துடன் வாக்காளர்களை சந்தித்த நிலையில், மக்கள் சேவை என்ற முழக்கத்தையும், கட்சியின் கொள்கை மற்றும் வேட்பாளர்களின் மீதான நற்பெயரையும் மட்டுமே முதலீடாகக் கொண்டு பா.ம.க. தேர்தலை சந்தித்தது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 60 நகராட்சி மன்ற உறுப்பினர்கள், 2 பேரூராட்சி தலைவர்கள், 108 பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என உதாசீனப்படுத்த முடியாத அளவுக்கு இடங்களை பா.ம.க. வென்றுள்ளது.

இவை தவிர பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ம.க. ஆதரவு பெற்ற 3 தனி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை மாநகராட்சி தேர்தலில் ஓர் இடத்தையும் கைப்பற்றியுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் ஆகியவற்றுக்கான முடிவுகள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அவற்றிலும் பா.ம.க.வுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

உள்ளாட்சி தேர்தலின் போது திராவிட கட்சிகள் பணத்தை வாரி இறைத்தன. தங்கக்காசு, மூக்குத்தி, பட்டுப் புடவைகள், அரிசி மூட்டை என வாக்காளர்களுக்கு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் போட்டி போட்டுக்கொண்டு வழங்கின.

இன்னொருபுறம் நடு நிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியின் துணை அமைப்பாக மாறி பல்வேறு முறைகேடுகளுக்கு துணை போனது. பல இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

இவற்றையெல்லாம் தாண்டி பா.ம.க. பெற்றுள்ள இந்த வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்காக பா.ம.க. வுக்கு வாக்களித்த மக்களுக்கும், கடுமையாக உழைத்த பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏழைகளாகவே வைத்திருக்கும் திராவிடக்கட்சிகள், தேர்தல்களில் வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெறுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.

திராவிடக் கட்சிகள் அறிமுகம் செய்த இந்த புதிய கலாச்சாரத்தால் தமிழகத்தில் தேர்தல் என்பது பணத்தை முதலீடு செய்து நடத்தப்படும் சூதாட்டமாக மாறியுள்ளது. இதைப்பார்த்து மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகள் தமிழகத்தை கேலி பேசும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி ஊழலற்ற அரசியலை ஏற்படுத்தவும், அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க பா.ம.க. எப்போதும் போலவே பாடுபடும்," என்று அதில் கூறியுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+