கலிங்கப்பட்டியில் வைகோ தம்பி ரவிசந்திரன் வெற்றி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவராக வைகோவின் தம்பி ரவிசந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் குருவிகுளம் யூனியன் கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் வைகோவின் தம்பி ரவிசந்திரன்,ராஜேந்திரன், புஷ்பராஜ், சுசிலா ஆகிய 4 பேர் போட்டியிட்டனர்.
இதில் 1849 ஓட்டுகள் பெற்று வைகோவின் தம்பி ரவிசந்திரன் வெற்றி பெற்றார்.அவரை எதிர்த்துபோட்டியிட்ட ராஜேந்திரன் 653 ஓட்டுகளும், புஷ்பராஜ் 344 ஓட்டுகளும், சுசிலா 47ஓட்டுகளும் பெற்று தோல்வியை தழுவினர்.












Click it and Unblock the Notifications