எதியூரப்பாவின் நீதிமன்ற காவல் நவம்பர் 3ம் தேதி வரை நீடிப்பு
பெங்களூர்: நிலமோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் கர்நாடகா முதல்வர் எதியூரப்பா மற்றும் எம்.எல்.ஏ. கிருஷ்ணய்யா ஷெட்டி ஆகியோரின் நீதிமன்ற காவலை வரும் நம்பவர் 3ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிலமோசடி வழக்கில் கர்நாடகா முதல்வர் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, மருமகன் ஷோகன்குமார் மற்றும் எம்எல்ஏ கிருஷ்ணய்யா ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரணையில் எதியூரப்பா மற்றும் கிருஷ்ணய்யா ஷெட்டியை கடந்த 15ம் தேதி முதல் இன்று வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. எதியூரப்பா மற்றும் கிருஷ்ணய்யாவை தவிர குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
எதியூரப்பாவை சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் நெஞ்சுவலி மற்றும் மூச்சுபிடிப்பு ஏற்பட்டதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பின் பெங்களூர் பரப்பன அக்ரகாரம் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றோடு நீதிமன்ற காவல்கேடு முடிந்ததால், அவ்வழக்கு மீண்டும் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அப்போது எதியூரப்பா மற்றும் எம்.எல்.ஏ. கிருஷ்ணய்யா ஷெட்டியின் நீதிமன்ற காவலை வரும் நவம்பர் 3ம் தேதி வரை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. உடல்நலக்குறைவுடன் இருந்த எதியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவில்லை என சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, பாஸ்போர்ட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications