கோட்டைப்பட்டி ஊராட்சியில் 2 வேட்பாளர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கியதால் குழப்பம்
வத்தலக்குண்டு: கோட்டைப்பட்டி ஊராட்சியில் 2 வேட்பாளர்களுக்கு வெற்றிச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திண்டுக்கல் மாவட்டம், கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது, ராமசாமி என்பவர் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்பு, பெயர் குழப்பம் காரணமாக ராமமூர்த்திக்கு பதிலாக ராமசாமி வெற்றி பெற்றதாக தவறாக அறிவித்துவிட்டோம் என கூறி ராமமூர்த்திக்கு அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர். ஆனால், தனக்கு வெற்றி பெற்றதாக கூறி வழங்கப்பட்ட சான்றிதழை திருப்பி தர ராமசாமி மறுத்துவிட்டார்.
இதனால், ராமசாமி வெற்றி பெற்றத்தற்கான ரத்துக்கான கடிதத்தை அப்பகுதி விஏஓ முருகன் மூலம் கொடுத்து அனுப்பினர். ஆனால், அதை ராமசாமி வாங்க மறுத்துவிட்டார். இதனால் அந்த கடிதத்தை அவரது வீட்டு கதவில் ஒட்டப்பட்டது.
இந்த நிலையில் இன்று கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதனால் அங்கு 2 தரப்பும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பதட்டம் நீடிக்கின்றது.












Click it and Unblock the Notifications