உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம்முக்கு 1.02%, சிபிஐக்கு வெறும் 0.71% வாக்குகள்!
சென்னை: கடந்த காலங்களில் சுமார் 2 சதவீத அளவுக்கு வாக்கு வங்கியை வைத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 0.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிபிஎம் கட்சியோ 1.02 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான வாக்கு வங்கி நிலையாக இருந்து வருகிறது. இரு கட்சிகளும் சராசரியாக தலா 2 சதவீத வாக்குகளை வைத்திருப்பதாக கடந்த கால தேர்தல்கள் மூலம் தெரிய வந்தது. ஆனால் இந்தப் பலம் கூட கூட்டணிக் கட்சிகளிடமிருந்து கிடைத்த வாக்குகளை வைத்துத்தான் என்பது அவ்வப்போது இவர்கள் தனியாக போட்டியிடும்போது தெரிய வரும்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் 2 சதவீத வாக்குகளைப் பெறத் தவறி விட்டன. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிக மோசமாக செயல்பட்டு வெறும் 0.71 சதவீத வாக்குகளை மட்டுமே வாங்கியுள்ளது. சிபிஎம்மின் பங்கு 1.02 சதவீதமாகும்.
இந்த இரு கட்சிகளும் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அப்போது சிபிஎம்முக்கு 2.4 சதவீத வாக்குகளும், சிபிஐக்கு 2 சதவீத வாக்குகளும் கிடைத்தன.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இவை வித்தியாசமான கூட்டணியை அமைத்தன. தேமுதிகவுடன் முதலில் பேசி கூட்டணி கண்டு போட்டியிட்டது சிபிஎம். ரொம்ப நாட்களாக போயஸ் கார்டன் பக்கமே தலையைத் திருப்பி வைத்துக் காத்திருந்து, எதுவும் கிடைக்காததால், வேறு வழியில்லாமல், அதேசமயம், அரைமனதோடு தேமுதிகவுடன் பேச வந்தது சிபிஐ. ஒரு வழியாக அதுவும் கூட்டணியில் இணைந்தது. ஆனால் இப்படியும் ஒரு கூட்டணியா என்று ஆச்சரியப்படும் வகையில், ஆங்காங்கு மட்டும் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதாக பின்னர் தகவல் வெளியானது.
இப்படி அரை வேக்காட்டுத்தனமாக கூட்டணி அமைத்த சிபிஐக்கு இந்தத் தேர்தலில் வெறும் 0.71 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. அதேசமயம், சிபிஎம்முக்கு 1.02 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. இதன் மூலம் திமுக அல்லது அதிமுகவுடன் சேர்ந்தால்தான் இந்தக் கட்சிகளுக்கு முழுமையான லாபம் கிடைக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications