10 மாநகராட்சிகளின் துணை மேயர் பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: சென்னை உட்பட 10 மாநகராட்சிகளுக்கு துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை துணை மேயருக்கான வேட்பாளராக வில்லிவாக்கம் ஒன்றிய கழகச் செயலாளரும், 145வது வார்டு கவுன்சிலருமான பெஞ்சமின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் நேரடியாகத் தேர்தல் நடந்தது. அதில் அனைத்து மேயர் பதவிகளையும் அதிமுகவே பிடித்தது. பெரும்பாலான கவுன்சிலர் பதவிகளையும் அதிமுகவே பிடித்துள்ளது.
இந் நிலையில் 10 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி அதிமுக சார்பில் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதன் விவரம்:
சென்னை- பொ.பெஞ்சமின், வில்லிவாக்கம் ஒன்றியக் கழகச் செயலாளர், 145-வது வார்டு கவுன்சிலர்.
வேலூர்- வி.டி.தர்மலிங்கம், பலவன்சாத்து ஊராட்சி கழக செயலாளர், 45-வது வார்டு கவுன்சிலர்.
சேலம்- எம்.நடேசன், சேலம் தெற்கு தொகுதி கழகச் செயலாளர், 50-வது வார்டு கவுன்சிலர்.
ஈரோடு- கே.சி.பழனிச்சாமி, மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர், 3-வது வார்டு கவுன்சிலர்.
திருப்பூர்- சு.குணசேகரன், திருப்பூர் நகர கழக துணைச் செயலாளர், 31-வது வார்டு கவுன்சிலர்
கோயம்புத்தூர்- என்.சின்னதுரை, சாய்பாபா காலனி பகுதி கழகச் செயலாளர், 56-வது வார்டு கவுன்சிலர்
திருச்சிராப்பள்ளி- எம்.ஆசிக் மீரா, 27-வது வார்டு கவுன்சிலர்.
மதுரை- ஆர்.கோபாலகிருஷ்ணன், 4-வது வார்டு கவுன்சிலர்.
திருநெல்வேலி- பி.கணேசன் (எ) ஜெகநாதன், 7-வது வட்ட கழகச் செயலாளர், 7-வது வார்டு கவுன்சிலர்.
தூத்துக்குடி- சேவியர், தூத்துக்குடி ஊரகப் பகுதி ஊராட்சி கழக செயலாளர், 18-வது வார்டு கவுன்சிலர்.
அதே போல மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கவுன்சிலர்கள் வாக்களித்து இவர்களைத் தேர்வு செய்வர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications