இன்று 'வியாழனை'ப் பார்க்கணுமா?

Subscribe to Oneindia Tamil

Jupiter Moons
சென்னை: இன்றும் நாளையும் நாளை மறுநாளும் வியாழன் கிரகத்தை வெறும் கண்களால் பூமியில் இருந்தபடி பார்க்கலாம் என வானியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று இரவு 7 மணிளவில் வியாழன் கிரகத்தைக் காண முடியும் என்று சென்னை பெரியார் வானியல் ஆய்வு மையத்தின் செயல் இயக்குநர் அய்யம் பெருமாள் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது: சூரியனை சுற்றும் போது 398.9 நாள்களுக்கு ஒருமுறை சுற்றுப் பாதையில் சூரியனுக்கு நேர் எதிரில் வியாழன் கிரகம் வருகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு சனிக்கிழமை (அக்-29) நடக்கவுள்ளது. இதனை நாம் பூமியில் இருந்தே எளிதாகக் காணலாம். சூரியனுக்கு அருகே வியாழன் கிரகம் நெருங்கி வருவதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் வியாழன்கிரகம் தான் மிகப் பெரியதாகும். பொதுவாக பூமிக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள தொலைவு 92 கோடி கிலோமீட்டர். ஆகும். ஆனால் சூரியனுக்கு நேர் எதிராக வியாழன் வரும்போது பூமிக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள தொலைவு குறைந்து விடும். இந்த தொலைவு 92 கோடி கிலோ மீட்டரிலிருந்து இருந்து 59.3 கிலோ மீட்டராகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவை நேர் எதிரில் வருவதால் வியாழன் மீது சூரிய ஒளி முழுவதும் படுவதாலும், பூமிக்கு அருகே நெருங்கி வருவதாலும் வியாழன் கிரகத்தை பூமியில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் ஆகிய நேரங்களில் வியாழன் கிரகம் வெளிச்சமாக காணப்படும். இதனை நேரடியாகவும், டெலஸ்கோப் வழியாகவும் பார்க்கலாம். இதற்காக பிர்லா கோளரங்க நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த நிகழ்வு ஒரு மாதத்துக்கும் மேலாக தொடரும் என்றாலும் நம்மால் மூன்று நாள்களும் தெளிவாக வியாழன் கிரகத்தை பார்க்க முடியும். இதே போன்ற நிகழ்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி நடந்தது. அடுத்ததாக 2012-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதியும் மீண்டும் இந்த நிகழ்வு நடக்கும்," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+