கருப்பு பணம் பதுக்கியவர்கள் பெயர்களை வெளியிடுவோம்: பிரணாப் முகர்ஜி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் வருமானவரித் துறையின் குற்றப்புலனாய்வு பிரிவு சார்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய நிதி அமைச்சகம் இதுவரை பல்வேறு நாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 9,900 நபர்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளது. அவர்கள் அனைவரிடமும் முதற்கட்டமாக விசாரணை நடத்தப்படும். பின்னர் வருமானவரித்துறை சட்டத்தின் படி அனைவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒருசிலரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் குற்றப்புலனாய்வுப்பிரிவு முடிவு செய்துள்ளது என்றார்.
பெயர் வெளியிட முடிவு
வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், தொழில் அதிபர்கள், எம்.பி.க்கள் உள்பட கறுப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர் விவரங்களை உடனடியாக வெளியிட முடியவில்லை என்று, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் பிரணாப் முகர்ஜியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், வெளிநாட்டு ஒப்பந்தங்களின்படி, கறுப்பு பணம் பற்றிய தகவல் கிடைத்தவுடன், விசாரணை தொடங்கப்பட்டு கோர்ட்டில் வழக்கு வரும்போது கறுப்பு பணம் வைத்திருப்போர் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்












Click it and Unblock the Notifications