அத்துமீறும் சீனாவை அடக்க இந்திய ராணுவத்துக்கு 1 லட்சம் கூடுதல் வீரர்கள்

இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்களை இந்திய ராணுவம் பணியில் சேர்க்கவுள்ளது.
அருணாசல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, காஷ்மீரின் லடாக் பகுதியில் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தானுக்காக சாலை போடும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.
இதையடுத்து சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த ரூ. 64,000 கோடி செலவில் பிரமாண்ட திட்டத்தை இந்திய ராணுவம் வகுத்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் நிதியமைச்சக அதிகாரிகளுடன் மற்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பான விரிவான ஆலோசனை நடத்தினர்.
முதல் கட்டமாக காஷ்மீரின் லடாக் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் இரு புதிய படைப் பிரிவுகள் அமைக்கப்பட உள்ளன. வரும் 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ராணுவத்துக்கு 1 லட்சம் பேரை புதிதாக சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் வீரர்கள் படிப்படியாக எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். சீன எல்லையில் 4 புதிய படைப் பிரிவுகளும் அமைக்கப்படவுள்ளன.
மேலும் எல்லைப் பகுதி படையினருக்கு சிறிய வகை பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் கூடுதல் எண்ணிக்கையில் வழங்கப்படவுள்ளன.
கடந்த 1962ம் போருக்குப் பின் எல்லைப் பாதுகாப்பு படையினருக்காக இந்த அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இப்போது இந்திய ராணுவத்தில் 11 லட்சம் படை வீரர்களும் 35,000 அதிகாரிகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications