கூடங்குளம் விவகாரம்: தமிழக அரசு குழுவில் 2 மக்கள் இயக்கத்தினர்
நெல்லை: கூடங்குளம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைக்கவிருக்கும் குழுவில் மக்கள் இயக்கம் சார்பில் 2 பேர் இடம்பெறுகின்றனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரி அப்பகுதி மக்கள் இன்றுடன் 16வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கூடங்குளம் மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசு நியமித்த 15 பேர் கொண்ட குழுவில் மாநில அரசின் சார்பிலும், போராட்டக்குழுவின் சார்பிலும் யாரும் இடம்பெறாததால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும்வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். நேற்று உண்ணாவிரதப் பந்தலில் தொட்டில் கட்டி அதில் பச்சிளம்குழந்தைகளைப் போட்டு போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அணுமின் நிலைய்ததிற்கு எதிராகப் போராடும் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்குழுவினர் நேற்று நெல்லை மாவட்ட ஆட்சியர் செல்வராஜை சந்தித்து பேசினர்.
கூடங்குளம் பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு ஒரு குழுவை அமைக்கவிருப்பதாகவும், அதில் போராட்டக்குழுவின் சார்பில் 2 பேர் தேர்வு செய்யப்படவிருப்பதாகவும் செல்வராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசின் குழுவில் இடம்பெற மக்கள் இயக்கம் சார்பில் சார்பில் அம்பை பங்கு தந்தை ஜேசுராஜ், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் புஷ்பராயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications