திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகள் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமியின் தம்பிகள் சங்கர், சொக்கலிங்கம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு திருவொற்றியூரைச் சேர்ந்த செல்லத்துரை என்ற மீனவர் கொல்லப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கே.பி.பி. சாமியின் தம்பி கே.பி.பி. சங்கர்(38) சென்னை மாநகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலராக உள்ளார். மீனவர் செல்லத்துரை கொலை வழக்கிலும், வேலு என்ற மீனவர் கடத்தப்பட்ட வழக்கிலும் சங்கருக்கு தொடர்பு இருப்பதால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது இந்த வழக்குகள் தவிர எண்ணூரைச் சேர்ந்த ஒருவரைக் கொல்ல முயன்ற வழக்கு, திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவரின் நிலத்தை அபகரித்த வழக்கு போன்ற வழக்குள் உள்ளன. எனவே, சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி அளிக்குமாறு திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் கேட்டுக் கொண்டார்.
கே.பி.பி.சங்கரையும், அதே வழக்குகளில் தொடர்புடைய அவரது தம்பி கே.பி.பி. சொக்கலிங்கத்தையும் 1 ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சங்கர் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications