மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை – ஆயிரக்கணக்கானோர் வாழ்த்து
நெல்லை: மேலப்பாளையத்தில் இந்திய ஹிஜ்ரி கமிட்டி சார்பில் சனிக்கிழமை காலை பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை திங்கட்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஓன்றாகும். இந்திய ஹிஜ்ரி கமிட்டி சார்பில் இஸ்லாமிய பிறை துல்லியமாக கணக்கிட்டதன் அடிப்படையில் நவ 5 காலை நெல்லை மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையும், குத்பா பிரசங்கமும் நடந்தப்பட்டது. இதில் மேலப்பாளையம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். தொழுகை முடிவில் பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஏழைகளுக்கு நல உதவிகளையும் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய ஹிஜ்ரி கமிட்டி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications