திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 நாளில் ராணுவ வீரர் பரிதாப சாவு
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் நிச்சயமான 2 நாளிலேயே மரணமடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் அருகே உள்ள புல்லிவிலையை சேர்ந்தவர் சுயம்புலிங்கசாமி. இவரது மகன் மணிகண்டன். இவர் சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வீரராக இருந்தார். இவருக்கு பெற்றோர்கள் தென்தாமரைகுளம் அடுத்த ஈச்சவிளை அருகே உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த 4ம் தேதி திருமண நிச்சயர்த்த நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக மணிகண்டன் கடந்த 3ம் தேதி சிக்கிமிலிருந்து ஊருக்கு வந்தார்.
அப்போது அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். பின்னர் பெரியோர்கள் முடிவு செய்தது போல் மணிகண்டனுக்கும், ஈச்சவிளையை சேர்ந்த அந்த பெண்ணுக்கும் நிச்சயர்த்தம் நடந்தது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட அன்று மாலை மணிகண்டன் உடல் நிலை மோசமானது. உடனே அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிக்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 நாளில் ராணுவ வீரர் இறந்ததால் இரு வீட்டாரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து சுசீந்தரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications