பேஸ்புக்கில் சி.பி.ஐ. - மக்கள் உதவியுடன் வழக்குகளை முடிக்க திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமூக இணையதளமான பேஸ்புக்கில் சி.பி.ஐ.யின் போபால் அலுவலகம் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் உதவி பெற்று வழக்குகளை விரைவாக முடிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இணையதளம் மூலமாக மக்களை சந்திக்கும் திட்டம் சோதனை முறையில் போபாலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

சி.பி.ஐ.யின் போபால் மையம் பேஸ்புக்கில் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சி.பி.ஐ.க்கு பயன்படும் தகவல்களை மக்கள் தெரிவிக்கலாம். இந்த முயற்சிக்கு இணையதள பயனீட்டாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

போபாலில் நடந்த ஷெஹ்லா மசூது கொலை வழக்கில் மக்களிடம் இருந்து பயனுள்ள தகவல்களை பெற்றுள்ளோம். இந்த தகவல்கள் டெல்லி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களை சரிபார்த்து இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கு அனுப்புவோம் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+