சென்னை-விதிமுறை மீறி கட்டப்படும் 2 ஹோட்டல்களுக்கு சி.எம்.டி.ஏ நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையி்ல் கடற்கரை ஓரமாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வரும் நட்சத்திர ஹோட்டல்கள் இரண்டுக்கு சி.எம்.டி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை அடுத்த எம்.ஆர்.சி. நகரில் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடம் உள்ளது. இந்த பகுதியில் 300 அறைகளுடன் கூடிய ஒரு ஹோட்டலும், 250 அறைகளுடன் கூடிய இன்னொரு ஹோட்டலும் கட்டப்பட்டு வருகிறது.
2 ஹோட்டல்களின் கட்டுமானப் பணிகளும் பாதி முடிந்துள்ளது. இந்த நிலையில் இந்த 2 ஹோட்டல்களும் விதிமுறையை மீறி கட்டப்பட்டு வருவதாக சி.எம்.டி.ஏ. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அன்மையில் தான் தி. நகரில் உள்ள பிரபல கடைகள் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அவற்றுக்கு சிஎம்டிஏ சீல் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications