சுவிஸ் வங்கியிலிருந்த கறுப்பு பணத்தையெல்லாம் எடுத்துட்டாங்க! -சந்தோஷ் ஹெக்டே
பெங்களூர்: சுவிஸ் வங்கிகளில் இருந்த கறுப்புப் பணத்தை எல்லாம் ஏற்கெனவே உஷாராக எடுத்துவிட்டார்கள். இனி அங்கிருந்து பணத்தை திரும்ப மீட்க முடியும் என்பது முட்டாள்தனம், என்கிறார் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்தியர்களின் கறுப்புப் பணம், தற்போது சுவிஸ் வங்கிகளில் இல்லை. இதை உறுதியாகச் சொல்ல முடியும். சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், அவற்றை எடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அதனால், அங்குள்ள வங்கிகளில் இருந்த இந்தியர்களின் கறுப்புப் பணம் எல்லாம், வரிச் சலுகை அளிக்கும் வேறு பல நாடுகளுக்கு மாற்றப்பட்டு விட்டன.
இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக இன்னமும் நம்புவது முட்டாள்தனமானது. இருந்தாலும், சுவிஸ் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்திருந்த இந்தியர்கள் பற்றிய விவரங்களை, மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும்.
அப்படிப் பெற்றால், அது அவர்களுக்கு எதிரான, பலமான ஆதாரமாக அமையும். கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் வரி ஏய்ப்புச் சட்டங்களின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். மேலும், பணம் எங்கு சென்றது என்பதையும் கண்டறியலாம்.
கறுப்புப் பண விவகாரத்தில், மத்திய அரசு வேண்டுமென்றே மந்தமாக செயல்படுவதன் மூலம், பல பெரும்புள்ளிகள் வெளிநாடுகளில் பணத்தைக் குவித்து வைத்திருப்பது தெரிகிறது," என்றார் ஹெக்டே.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications