துருக்கியில் நிலநடுக்கம்: 7 பேர் பலி, 25 பேர் காயம்- மீட்புப் பணி தீவிரம்
துருக்கி: துருக்கியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7 பேர் பலியாகினர். 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
துருக்கி நாட்டின் வேன் நகரில் நேற்று இரவு 9.23 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 25 கட்டிடங்கள் தரைமட்டமானது. இதில் 2 ஹோட்டல்கள், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் மட்டுமே மக்கள் இருந்தனர். மீதமுள்ள 23 கட்டிடங்கள் காலியாக இருந்தன. இந்த சம்பவத்தில் இடிந்து விழுந்த பேராம் ஹோட்டலில் அதிகளவில் பத்திரிக்கையாளர்கள் தங்கி இருந்தனர்.
கடந்த மாதம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்திகளை திரட்டும் பணியில் ஹோட்டலில் தங்கியிருந்த பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புக் குழுவினர் இரவுப் பகலாக தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications