5 மாதங்களாக நிதியின்றி திண்டாடும் கிராம பஞ்சாயத்துகள்: அரசு கண்டுகொள்ளுமா?
சென்னை: தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு கடந்த 5 மாதங்களாக ஊழியர்கள் ஊதியம் மற்றும் அடிப்படை தேவைகளுக்கு நிதியுதவி ஒதுக்கீடு செய்வதை அரசு நிறுத்தியதால் புதிய தலைவர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளுக்கு மாதாந்திர நிதி ஒதுக்கீடு செய்வதை அரசு நிறுத்தியுள்ளது. கடந்த 5 மாதங்களாக பஞ்சாயத்துகளில் பணியாற்றும் எழுத்தர், துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் என மாநிலம் முழுவதும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோருக்கு ஊதியத்துக்கான நிதி வழங்காமலும், அடிப்படை வசதிகளான சுகாதாரத்தை பேணுதல், பழுதான குடிநீர் குழாய்களை சீரமைத்தல், அடிபம்புகள் மற்றும் மின் மோட்டார்கள் வசதியுடன் கூடிய குடிநீர் தொட்டிகள் பழுதுகளை சீரமைக்க எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன் முந்தைய தலைவர், எழுத்தரிடம் மக்கள் கோரிக்கை வைத்தும் அப்பணி நடைபெறவில்லை. தற்போது உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற புதிய தலைவர்கள் பொறுப்பேற்ற நிலையில் மேற்கூறிய பஞ்சாயத்து அடிப்படை வசதி பணிகள் செய்யக்கோரி வாக்களித்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில் புதிய தலைவர்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறி வருவதுடன் புகார்களை தெரிவிக்க வரும் பொதுமக்களை கண்டால் ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 19 யூனியன் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் 425 பஞ்சாயத்துகளில் 90 சதவீதத்திற்கும் மேலான பஞ்சாயத்துக்கள் நிதிப்பற்றாக்குறையில் சிக்கி தவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications