கனிமொழியை சிறையில் வைத்திருப்பது எந்த வகையில் சரி?- கருணாநிதி வேதனை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
மாநிலங்களவை உறுப்பினரும், தங்கள் மகளுமான கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன் மறுக்கப்படுவது பற்றி?
கனிமொழி உள்ளிட்ட எட்டு பேருக்கு 3-11-2011ல் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது குறித்து முதலில் நான் கருத்து சொல்வதை விட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், சட்டப்படி தண்டிக்கப்படாத ஒருவரை நீண்ட காலம் சிறையிலே வைத்திருப்பது எந்த வகையில் சரியானது?
விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைத்து வைத்திருப்பது சரியான நடைமுறையல்ல என்று செய்தியாளர்களிடம் கூறியதோடு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவருவதற்கான உரிமை உள்ளது என்று ஒரு வழக்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அளித்துள்ள உத்தரவைச் சுட்டிக்காட்டி, அந்த நடை முறையை நீதித் துறை கவனத்திலே கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய அரசின் முன்னாள் சட்ட அமைச்சரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பது மிகக் கடுமையான சட்ட விதிமுறை மீறல். இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே சட்டம் தவறாகப் பயன்படுத் தப்படுகிறது. இது நீதியை தடம் புரளச் செய்யும் காரியமாகி விட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டோர் ஓடி மறைந்து விடுவர் அல்லது சாட்சியங்களை கலைத்து விடுவர் என்ற சூழ்நிலைகளின் போது தான் ஜாமீன் மறுக்கப்படும். ஆனால் இந்தப் பெண், கனிமொழியைப் பொறுத்த வரையில் இவ்வாறு சந்தேகப்படுவதற்கு எந்தவிதமான ஆதாரமுமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜ் ராமச்சந்திரன், நீதிபதியின் தீர்ப்பைக் கேட்டு பெரும் ஏமாற்றமடைந்தேன். இதை நான் எதிர்பார்க்கவில்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் ஜாமீன் வழங்குவது சட்டப்படி வழக்கமான ஒன்று என்று கருத்து தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு மூத்த வழக்கறிஞர் அமான் லேக்கி, தொடர்ந்து சிறையில் வைப்பது சரியல்ல ஜாமீன் மறுப்புக்கு சரியான காரணம் கூறப்படவில்லை என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், சி.பி.ஐ. அமைப்பில் பல ஆண்டுக் காலம் முக்கியப் பொறுப்பில் இருந்தவருமான வி.ஆர். லட்சுமிநாராயணன், தி.மு.க., எம்.பி., கனிமொழி மற்றும் ஏழு பேருக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்திருப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்திட முடியாது. முழு விசாரணை தொடங்குவதற்கு முன்பு குற்றஞ்சாற்றப்பெற்றோர் தொடர்ந்து சிறையிலே இருந்திட வேண்டுமென்று வலியுறுத்துவது இந்திய உச்ச நீதிமன்றம் வகுத்து அளித்துள்ள வழிமுறைகளின்படி ஆச்சரியமாக இருப்பது மட்டுமல்லாமல்,
அது ஏற்றுக் கொள்ள முடியாததும் கூட இப்போதும்கூட, உச்ச நீதிமன்றத்தின் சொற்களான ஜாமீன் என்பது விதிமுறைகளின்படி வழங்கப்பட வேண்டிய ஒன்று. சிறையிலேயே இருக்க வேண்டுமென்பது விதிகளுக்குப் புறம்பானது. என்னுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன என்று எழுதியிருக்கிறார்.
ஆங்கில நாளேடான தி இந்து 4-11-2011 நாளிட்ட தனது தலையங்கத்தில், 2 ஜி வழக்கில் கனிமொழி உள்ளிட்டோருக்கு மீண்டும் ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பது குற்றவியல் சட்டத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்று எழுதியிருக்கிறது.
2 ஜி வழக்கைப் பொறுத்தவரையில் புலன் விசாரணை முடிந்து விட்டது. குற்றச்சாற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முழுமையான விசாரணை விரைவில் தொடங்கவிருக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டோர் ஆறு மாதங்களுக்கு மேலாக திகார் சிறையில் வாடி வருகின்றனர். வழக்கு தொடுத்த புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, குற்றஞ்சாட்டப்பட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட தற்கு பிறகு ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 437ன்படி கனிமொழி போன்றவர்களுக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருக்கின்றனர். சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களையும், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரைகளையும் சிந்தித்துப் பார்க்கும்போது, கருத்தியல் அடிப்படையிலானதும், நிலை நிறுத்த முடியாததுமான அனுமானங்கள் ஆழமாய் பதிந்து விட்டனவோ என்ற அய்யப்பாடும், நீதி தாமதிக்கப்படுகிறதோ என்ற வேதனையும் நமக்கு நெருடலை ஏற்படுத்தத் தான் செய்கிறது.
இந்தியத் திருநாட்டின் ஜனநாயகம் இற்றுப் போய் விடாமல் தாங்கி நிற்கும் மிக முக்கிய தூணாகவும், இந்திய மக்களின் இறுதி நம்பிக்கையாகவும் விளங்கும் நீதிமன்றங்கள் சட்ட ரீதியான உரிமையை வழங்கிடவும், சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் காப்பாற்றிடவும், தயக்கம் காட்டுமானால் இந்திய ஜனநாயகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது என்ற வினாவும் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கவலையும் எல்லோரது உள்ளங்களிலும் எழுவது தவிர்த்திட இயலாத ஒன்றாகும்.
டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல் முறையீடு செய்யப்பட்டு, நீதிபதி, மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டு டிசம்பர் 1ம் தேதி வழக்கினை ஒத்தி வைத்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் கனிமொழியின் ஜாமீன் மனு என்னவாகும் என்று செய்தியாளர்கள் என்னைக் கேட்டபோது அல்லதை விடுத்து நல்லதையே நினைப்போம் என்று கூறியிருந்தேன். அதையே நினைப்போம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications