தமிழகத்தில் 7 புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க ஜெ. உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 7 போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் பெருகி வரும் சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் இழப்புகளையும் கருத்தில் கொண்டு போக்குவரத்து தொடர்பான காவல்பணிகளை செய்வதற்கு புதிதாக 5 போக்குவரத்துக் காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
இதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், கன்னியாகுமரி மாவட்ட பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் இந்த புதிய போக்குவரத்துக் காவல்நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தக் காவல் நிலையங்களில் பணிபுரிவதற்காக 5 ஆய்வாளர்கள், 10 சார் ஆய்வாளர்கள், 15 தலைமைக் காவலர்கள் என மொத்தம் 80 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னைக்கு 2
சென்னை காவல் துறைக்கு உட்பட்ட வளசரவாக்கம், செம்மஞ்சேரியில் இரண்டு போக்குவரத்து காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த புதிய காவல்நிலையங்களால் தமிழக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 2 கோடியே 71 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications