மத்திய அரசுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லை; ஜெ தவறான தகவல் தருகிறார்!- அமைச்சர் ஜி.கே.வாசன்

Subscribe to Oneindia Tamil

GK Vasan
தூத்துக்குடி : தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 23 ஆயிரத்து 636 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010 -11 ம் ஆண்டைக் காட்டிலும் ரூ. 3467 கோடி அதிகம் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் அது மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

இதன்காரணமாவே பால்விலை, பேருந்து கட்டணங்களை உயர்த்துவதாகவும் அவர் விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் முதலமைச்சரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரூ 3467 கூடுதல் நிதி

அவர் கூறுகையில், "தமிழகத்தை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துதாக முதல்வர் ஜெயலலிதா கூறியது தவறான தகவல்.

கடந்த 2011-12 ம் ஆண்டில், தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ. 23 ஆயிரத்து 636 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2010 -11 ம் ஆண்டைக் காட்டிலும் ரூ. 3467 கோடி அதிகம். இதில் இருந்து அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு ஒரே மாதிரியே நடத்துவதை அறியலாம்.

அணுமின் நிலையம் அவசியம்

நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் மின் தேவைக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் அவசியம் தேவை. இதனால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாது.

மக்களின் சந்தேகங்களை தீர்க்கவே, மத்திய நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதில் பல்துறை வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+