பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்ட் மன்மோகன் அரசு- வைகோ குற்றச்சாட்டு
தஞ்சாவூர்: பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக மன்மோகன் அரசு செயல்படுவதால் அவர்களுக்கு விவசாயிகளைப் பற்றி கவலை இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகம் பனகல் கட்டிடம் முன்பு உரத் தட்டுப்பாடு, உர விலையேற்றம், விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது ஆகியவற்றை கண்டித்து மதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது,
உரங்களின் விலையை தாறுமாறாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடமையை நிறைவேற்றத் தவறிய அதிமுக அரசை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறோம்.
உரங்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு உதறி விட்டது. அதனால் உரக் கம்பெனிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விலைகளை ஏற்றி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள சூழலில் விவசாயம் செய்வதால் எந்த லாபமும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் செய்யவே பலர் முன்வருவதில்லை.
நதிநீர் பிரச்னை, உரத் தட்டுப்பாடு, விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, இடுபொருட்கள் தட்டுப்பாடு, இன்சூரன்ஸ் தொகை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் விவசாயிகள் சிக்கித் தவிக்கின்றனர். இதே நிலை நீடிக்குமானால் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக மன்மோகன் அரசு செயல்படுகிறது. விவசாயிகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
இங்குள்ள அரசும் இலவசங்களைக் கொடுத்து போதைக்கு அடிமைப்படுத்தி மக்களை ஏமாற்றும் அரசாக உள்ளது என்றார்.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications