ஐரோப்பிய மார்க்கெட் சரிவு... இந்திய பங்குச் சந்தையில் 420 புள்ளிகள் வீழ்ச்சி!
மும்பை: ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி காரணமாக, இந்திய பங்குச் சந்தைகளும் சரிவைச் சந்தித்தன இன்று.
ஐரோப்பிய சந்தைகள் 2 சதவீதம் வரையிலும், அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 152 புள்ளிகளும் இழந்து தடுமாறின.
இதன் விளைவாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் எடுத்த எடுப்பில் 350 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. நிப்டியில் 107 புள்ளிகள் சரிந்தன. வர்த்தக நேர இறுதியில் 423 புள்ளிகள் சென்செக்ஸும், 115 புள்ளிகளை நிப்டியும் இழந்தன.
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் 4.5 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. ஐசிஐசிஐ, பிஎச்இஎல் பங்குகளும் கணிசமாக நஷ்டமடைந்தன.
இன்போஸிஸ், எச்டிஎப்சி, எஸ்பிஐ, ஒஎன்ஜிசி, ஐடிசி, பார்தி ஏர்டெல் என பல துறையைச் சார்ந்த நிறுவனப் பங்குகளும் இன்று முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தின.
தொடர்ந்து எட்டு தினங்களாக இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சென்க்செக்ஸ் 15947 புள்ளிகளாகவும், நிப்டி 4,790 புள்ளிகளாகவும் உள்ளது. ஒன்றரை மாதங்களில் மீண்டும் 16000 புள்ளிகளுக்கும் கீழே வீழ்ச்சி கண்டுள்ளது சென்செக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 54 பைசா வீழ்ச்சியடைந்தது சந்தை நிலைமையை மோசமாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications