For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி எம்.பிக்களைத் தாக்கிய ஆளுங்கட்சியினர்

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்திற்குள் வைத்து ஆளுங்கட்சி எம்.பிக்கள் எதிர்கட்சியினரை தாக்கியுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பட்ஜெட் குறித்த் உரை நிகழ்த்தினார். அப்போது அதற்கு எதிர்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவி்த்தனர். அவர்கள் வாசகங்கள் அடங்கிய அட்டையை தூக்குப் பிடித்து காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதை பார்த்த ஆளுங்கட்சியினர் ஆத்திரமடைந்தனர். உடனே பாயந்து வந்து எதிர்கட்சியினர் கையில் இருந்த அட்டைகளைப் பறிக்க முயன்றனர். அட்டைகளைத் தர எதிர்கட்சியினர் மறுக்கவே இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றி கைகலப்பாகிவிட்டது. இதையடு்தது எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்று தெரியவில்லை.

English summary
Ruling party in Sri Lanka has attacked the oppostion party members during a budget speech by president Rajapakse in the parliament. When Rajapakse was giving a budget speech opposition protested it. On seeing this the ruling party members attacked the opposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X