நதிகள் இணைப்பை வலியுறுத்தி 3ம் தேதி சென்னை-புதுவைக்கு பாதயாத்திரை: குமரி அனந்தன்
சென்னை: நதிகள் இணைப்பை வலியுறுத்தி காந்தி பேரவை சார்பில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வரும் 3ம் தேதி பாதயாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக அந்த பேரவையின் தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூட்டம் சென்னையில் உள்ள பாரதியார் இல்லத்தில் நடந்தது. மயிலை பெரியசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் பேசியதாவது,
அமெரிக்காவில் பெய்யும் அளவுக்கு இந்தியாவிலும் மழை பெய்கிறது. அப்படி இருக்கையில் அவர்கள் நம் நம்மைவிட 6 மடங்கு அதிக தண்ணீரை சேமிக்கின்றனர். நம் நாட்டிலோ ஒரு பக்கம் வெள்ள சேதம் மறுபக்கம் வரட்சி.
எனவே, நதிகள் இணைப்பை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி பாரதியார் இல்லத்தில் இருந்து புதுச்சேரிக்கு பாதயாத்திரை நடக்கிறது. இந்த யாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் துவங்கி வைக்கிறார்.
நம் நாட்டில் கிடைக்கும் தண்ணீரில் வெறும் 31 சதவீதத்தை தான் பயன்படுத்துகிறோம். மீதமுள்ள 69 சதவீதம் கடலில் கலக்கிறது. தற்போது இந்தியாவில் 49.4 மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் பயிர் செய்யப்படுகிறது. இதுவே நதிகளை இணைத்தால் கூடுதலாக 35 மில்லியன் ஹெக்டேரில் பயிர் செய்ய முடியும். தற்போது நீர் மூலம் 22,438 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. அதுவே நதிகள் இணைக்கப்பட்டால் 1,48,700 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நதிகள் இணைக்கப்பட்டால் நீர்வழிச்சாலை கிடைக்கும். ஒரு குதிரை சக்தியை கொண்டு தரையில் 150 கிலோ பாரத்தையும், ரயிலில் 500 கிலோ பாரத்தையும், நீர்வழியில் கப்பல் மூலம் 4,000 கிலோ பாரத்தையும் கொண்டு செல்லலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்நியச் செலவாணி மிச்சமாகும். அதனால் நதிகளை இணைப்பதே நாட்டின் நலனைப் பெருக்க உதவும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications