2ஜி ஊழல்: 5 டெலிகாம் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்- கனிமொழிக்கும் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு இன்று ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை அழித்துவிடுவர் என்று சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால், அதையும் மீறி இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்த ஐந்து பேரும் கடந்த 7 மாதங்களாக சிறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இவர்களது ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து இவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதில் தான் இவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
இதனால் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இவர்களுக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமாரின் ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இவர்கள் தாக்கல் செய்துள்ள புதிய ஜாமீன் மனு வரும் டிசம்பர் 1ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications