கோவணத்தோடு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் வரவேற்பாரா?-இந்து மக்கள் கட்சி கேள்வி!

சினிமா நடிகைகள் பலர் படு கவர்ச்சியாக உடை அணிந்தும், குட்டைப் பாவாடை அணிந்தும் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவது சமீப காலமாக சர்ச்சையாகியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்பு, நடிகை ஷ்ரேயா படு கவர்ச்சிகரமாக டிரஸ் போட்டு வந்து அனைவரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தினார்.
இந்த நலையில் நமீதா அணியும் கவர்ச்சி ஆடைகளும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதுகுறித்து 'கருத்து புகழ்' குஷ்பு கருத்து தெரிவிக்கையில்,
நமீதாவை எனக்கு ரொம்ப காலமாகவே தெரியும். அவர் குட்டை பாவாடை அணிவதை எப்போதும் விரும்புவார். அதோடு கூடவே ஒரு துண்டையும் எடுத்துச் செல்வார்.
ஒருத்தர் அணியும் ஆடை என்பது அவரது தனிப்பட்ட வசதியையும் விருப்பத்தையும் பொருத்தது. மற்றவர்கள் உத்தரவு போட முடியாது. சினிமாவில் இருப்பவர்கள் யாரும் இதை எதிர்க்கவில்லை. வெளியில் உள்ள சில சுயநல சக்திகள் இரண்டு நிமிட புகழுக்காக எதிர்ப்பு காட்டுகின்றன என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் பி.ஆர்.குமார் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம், கலாசாரம் பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலம், அதனால் தான் கற்புக்கரசியான கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல் இரண்டு நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் அதுபோல் அணியலாம். பொதுவிழாக்களுக்கு அதுபோல் வரக்கூடாது என்கிறோம்.
கிராமத்தில் விவசாய வலி தொழிலாளர்கள் பலர் கோவணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர். அதுபோல் கோவணம் அணிந்து கொண்டு 200 பேர் குஷ்பு வீட்டுக்கு வந்தால் அவர்களை குஷ்பு சந்திப்பாரா? அல்லது பேசத்தான் செய்வாரா?
அதுபோலத்தான் நடிகைகள் கவர்ச்சி ஆடையில் பொது விழாக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்க்கிறோம். அதை எதிர்க்கிறோம். அத்தகு நடிகைகளுக்கு வக்காலத்து வாங்கி எங்களை எதிர்ப்பதை குஷ்பு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications