ஹய்யா, ஜாமீன் கிடைச்சாச்சு: துள்ளி குதித்த உறவினர்களை கண்டித்த நீதிபதி
டெல்லி: 2ஜி வழக்கில் கைதான கார்பரேட் அதிகாரிகள் 5 பேருக்கு ஜாமீன் கிடைத்த தகவல் அறிந்ததும் அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தில் துள்ளி குதித்து கொண்டாடியதால் அவர்களை நீதிபதி கண்டித்தார்.
2ஜி ஊழல் வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சிபிஐ தனி நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. நீதிபதி ஓ.பி. சைனி முன்பு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
ஹெச்.டி.எப்.சி. வங்கியின் உதவி துணைத்தலைவர் உதய் சகஸ்ரபுத்தேயிடம் குறுக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கௌதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய தகவல் கிடைத்தது.
உடனே அந்த 5 பேரும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். நீதிமன்றத்தில் இருந்த தங்களது உறவினர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சிலருடைய உறவினர்கள் எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் கொண்டுவந்திருந்த இனிப்புகளை வழங்கினர். அந்த 5 பேருக்கும் ராசா, கனிமொழி உள்ளிட்ட மற்றவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விசாரணை நடந்து கொண்டிருக்கையில் இந்த கொண்டாட்டங்களால் நீதிமன்றத்தி்ல் சிறிது நேரம் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து நீதிபதி சைனி குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்களையும், நிருபர்களையும் இடையூறு செய்யாமல் வெளியேறுமாறு தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications