கடலூர் காவல் நிலையங்களுக்கு பெண் வரவேற்பாளர்கள் நியமனம்- எஸ்.பி. பகலவன் தகவல்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்களை மாவட்ட எஸ்.பி. பகலவன் நியமித்துள்ளார்.
தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களை வரவேற்று, அவர்களுக்கு உதவ வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா சென்னையில் நடந்த கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாட்டில் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 52 காவல் நிலையங்களுக்கும் வரவேற்பாளர்களை எஸ்.பி. பகலவன் நியமித்து உத்தரவிட்டார்.
நகரப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு தலா 2 வரவேற்பாளர்கள், கிராமப் பகுதியில் தலா ஒரு பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீதம் 56 பெண் போலீசார், 25 ஆண் போலீசார் என்று மொத்தம் 82 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் எப்படி பழக வேண்டும், அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது குறித்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக எஸ்.பி. பகவலன் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications