வெள்ளக்கோவிலி்ல் நகராட்சி தேர்தல்: வெப்கேமரா மூலம் கண்காணிப்பு
வெள்ளக்கோவில்: இன்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளக்கோவில் நகராட்சி தேர்தல் வாக்குபதிவு அமைதியாக நடைபெறறு வருகின்றது.
வெள்ளக்கோவில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனகசபாபதி திடீர் என மரணம் அடைந்தார். இதனையடுத்து இந்த நகராட்சி தேர்தல் மட்டும் மாநில தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது. அதிமுக சார்பில் கந்தசாமியும், திமுக சார்பில் செல்வராஜ் ஆகியோர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.
வெள்ளக்கோவில் நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளிலும் வெப்கேமரா மூலம் வாக்குபதிவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள சமச்சீர் கல்வி, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் வெட்டு போன்ற சம்பவங்கள் அதிமுக வெற்றியை பாதிக்கும் என அதிமுக வேட்பாளர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications